முதல் போட்டியே மாஸ்… ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ !! 1

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 13 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே கொரோனா இரண்டாவது அலை இந்தியாவின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டதால், ஐபிஎல் தொடரும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

முதல் போட்டியே மாஸ்… ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ !! 2

இதையடுத்து இறுதிப்போட்டி உள்பட எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

முதல் போட்டியே மாஸ்… ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ !! 3

இதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதிவரை எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன. மீண்டும் தொடங்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை துபாயில் எதிர்கொள்கிறது. மறுநாள் (செப்.20) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் அபுதாபியில் மோதுகிறது. இறுதிப்போட்டி துபாயில் அரங்கேறுகிறது.

30 Sunday 19 Sep 2021 7:30 PM CSK vs MI Dubai
31 Monday 20 Sep 2021 7:30 PM KKR vs RCB Abu Dhabi
32 Tuesday 21 Sep 2021 7:30 PM PBKS vs RR Dubai
33 Wednesday 22 Sep 2021 7:30 PM DC vs SRH Dubai
34 Thursday 23 Sep 2021 7:30 PM MI vs KKR Abu Dhabi
35 Friday 24 Sep 2021 7:30 PM RCB vs CSK Sharjah
36 Saturday 25 Sep 2021 3:30 PM DC vs RR Abu Dhabi
37 Saturday 25 Sep 2021 7:30 PM SRH vs PBKS Sharjah
38 Sunday 26 Sep 2021 3:30 PM CSK vs KKR Abu Dhabi
39 Sunday 26 Sep 2021 7:30 PM RCB vs MI Dubai
40 Monday 27 Sep 2021 7:30 PM SRH vs RR Dubai
41 Tuesday 28 Sep 2021 3:30 PM KKR vs DC Sharjah
42 Tuesday 28 Sep 2021 7:30 PM MI vs PBKS Abu Dhabi
43 Wednesday 29 Sep 2021 7:30 PM RR vs RCB Dubai
44 Thursday 30 Sep 2021 7:30 PM SRH vs CSK Sharjah
45 Friday 1 Oct 2021 7:30 PM KKR vs PBKS Dubai
46 Saturday 2 Oct 2021 3:30 PM MI vs DC Sharjah
47 Saturday 2 Oct 2021 7:30 PM RR vs CSK Abu Dhabi
48 Sunday 3 Oct 2021 3:30 PM RCB vs PBKS Sharjah
49 Sunday 3 Oct 2021 7:30 PM KKR vs SRH Dubai
50 Monday 4 Oct 2021 7:30 PM DC vs CSK Dubai
51 Tuesday 5 Oct 2021 7:30 PM RR vs MI Sharjah
52 Wednesday 6 Oct 2021 7:30 PM RCB vs SRH Abu Dhabi
53 Thursday 7 Oct 2021 3:30 PM CSK vs PBKS Dubai
54 Thursday 7 Oct 2021 7:30 PM KKR vs RR Sharjah
55 Friday 8 Oct 2021 3:30 PM SRH vs MI Abu Dhabi
56 Friday 8 Oct 2021 7:30 PM RCB vs DC Dubai
57 Sunday 10 Oct 2021 7:30 PM Qualifier 1 Dubai
58 Monday 11 Oct 2021 7:30 PM Eliminator Sharjah
59 Wednesday 13 Oct 2021 7:30 PM Qualifier 2 Sharjah
60 Friday 15 Oct 2021 7:30 PM Final Dubai

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *