சதம் அடிப்பதை விட இது தான் முக்கியம், அதை விராட் கோலியே ஒப்புக்கொள்வார்; சபா கரிம் பேட்டி !! 1

ஐபிஎல் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 9 நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டி பயோ பபுள் விதிமுறைகளின் படி நடக்க உள்ளது.

இந்நிலையில் இரு அணி வீரர்களும் தங்களை மிக சிறப்பாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர். ஐந்து முறை சாம்பியன்ஷிப் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணி காத்துகொண்டு உள்ளது.

சதம் அடிப்பதை விட இது தான் முக்கியம், அதை விராட் கோலியே ஒப்புக்கொள்வார்; சபா கரிம் பேட்டி !! 2

இந்நிலையில் பயிற்சியை மேற்கொள்ள இருக்கும் வீரர்கள் நிச்சயம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளதால் அனைத்து வீரர்களும் அதை முடித்துவிட்டு மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளனர்.

இந்திய அணியை மிகவும் திறம்பட வழி நடத்தும் விராட் கோலி, அனைத்து தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஆனால் ஐபிஎல் போட்டியில் இதுவரை இவரது தலைமையில் ஒரு முறை கூட பெங்களூர் அணி டைட்டில் பட்டத்தை வென்றது கிடையாது. இதனால் மிகப்பெரும் கெட்ட பெயரை சம்பாதித்து வரும் விராட் கோலி இந்த முறை எப்படியாவது ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் இடத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணி வெல்வதற்கான உத்திகளை கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சதம் அடிப்பதை விட இது தான் முக்கியம், அதை விராட் கோலியே ஒப்புக்கொள்வார்; சபா கரிம் பேட்டி !! 3

இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம் தெரிவித்ததாவது,நீங்கள் விராட் கோலியுடன் சென்று உங்களுக்கு ஐபிஎல் போட்டியில் சதம் அடிப்பது முக்கியமா.? அல்லது சாம்பியன் பட்டத்தை வெல்வது முக்கியமா.? என்று கேட்டால் அதற்கு அவர் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வதுதான் என்னுடைய ஒரே நோக்கம் என்று தெரிவிப்பார்.

மேலும் அவர் கூறியதாவது விராட் கோலி சதம் அடிப்பதால் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று கேட்டால் கிடையாது, ஆனால் அவர் ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்றுவிட்டால் நிச்சயம் அது ஒரு மிகப் பெரிய மாற்றமாக அது அமையும் என்று தெரிவித்தார்.

மேலும் மும்பை மற்றும் பெங்களூரு இடையிலான முதல் போட்டி சென்னை மைதானத்தில் நடக்கவுள்ளது.சென்னையில் உள்ள பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் ஏற்புடையதாக இருப்பதால் பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி நிச்சயம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *