ராஜவர்தன் ஹங்ரேக்கர்;
சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜொலித்த ராஜவர்தன் ஹங்ரேக்கரை, 1.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த சென்னை அணி, அவருக்கு இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவரான ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.