Use your ← → (arrow) keys to browse
நாரயன் ஜெகதீஷன்;
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஜெகதீஷன் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார், ஆனால் சென்னை அணியோ அவருக்கான வாய்ப்பு சரியாக கொடுப்பதே இல்லை. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் என அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ஜெகதீஷனுக்கு சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஓரிரு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக ஜெகதீஷனுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Use your ← → (arrow) keys to browse