கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக சமீபமாக இந்தியாவில் நடைபெற்று வந்த 2021 ஐபிஎல் போட்டி தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது இந்த போட்டி நடைபெறுமா?, அல்லது இந்த 2021 போட்டி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று ரசிகர்களிடத்தில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தப் போட்டி இலங்கை இங்கிலாந்து அல்லது துபாய் அமீரகத்தில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மிகப்பெரும் மேலும் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது கோர் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும் திட்டங்களை தீட்டி வருகிறது இந்நிலையில் ஒவ்வொரு அணியும் RTM என்ற விதியை பயன்படுத்தி தங்களது அணிக்கு தேவைப்படும் முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் தொடரில் வாய்ப்பு உள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள அனைத்து அணிகளும் பலவிதமான திட்டங்களை தீட்டி வருகின்றது.
இந்நிலையில் ஆர்பிஎம் என்ற விதியை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க முயற்சிக்கும் மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ஹர்திக் பாண்டிய

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார் உதவியால் பல முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது,மேலும் இவருடைய அபரிவிதமான பில்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறது பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங் ஆகிய அனைத்திலும் கலக்கி கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி ஒருகாலும் விட்டுக் கொடுக்காது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியகுமார் யாதவ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கடந்தாண்டு மிகச் சிறப்பாக செயல் பட்டதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகிறார் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார், மேலும் ஐபிஎல் தொடரிலும் தனது பார்மை மிக சிறப்பாக செயல்படுத்தும் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக்கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரென்ட் போல்ட்

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார்,இவருடைய அபாரமான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி பல முறை வெற்றி பெற்றுள்ளது, இதன் காரணமாக இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தக்க வைத்துக்கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.