2- ஆல் ரவுண்டர்கள்;
இந்த தொடருக்கான சென்னை அணி பேட்டிங்கில் வலுவானதாகவே உள்ளது. 10வது வீரராக களமிறங்கும் கிரிஸ் ஜோர்டன் வரை பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் தான். ஆனால் சென்னை அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தனது ஆல் ரவுண்டர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. டூவைன் பிராவோவால் பழையபடி பேட்டிங் செய்ய முடிவதில்லை என்பதால் அவரது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் ப்ரெடோரியஸ் போன்ற வீரர்களை களமிறக்கி அவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதே போல் சமகால கிரிக்கெட் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் மொய்ன் அலியை, இதுவரை சென்னை அணி பேட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவரான மொய்ன் அலியை சென்னை அணி பந்துவீச்சிற்கு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.