சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் தனது சிறப்பான பேட்டிங் மூலம் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிக சிறந்த முறையில் விளையாடும் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தக்கவைக்கவில்லை.
ஒரு அணியை வழிநடத்தும் திறமையையும் பெற்றிருக்கும் குயின்டன் டி காக் நடைபெற இருக்கும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ய பெரும்பாலான அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த மூன்று அணிகள் குயின்டன் டி காகை தனது அணியில் இணைப்பதற்கு போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும்க செயல்பட்ட நட்சத்திர வீரர் கே எல் ராகுலை 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்கவில்லை.
இதன் காரணமாக அணியை வழி நடத்தக்கூடிய மற்றும் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடிய திறமை படைத்த குயின்டன் டி காகை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் 8-10 கோடிவரை தொகை கொடுத்து ஏலத்தில் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.