சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2022 ஐபிஎல் தொடருக்கான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளிநாட்டு வீரர்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை மட்டும்தான் தக்கவைத்துக் கொண்டது. மேலும் அந்த அணி தனது அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக செயல்பட்ட ஜானி பேர்ஸ்டோ மற்றும் விருத்திமான் சஹா ஆகிய இரு வீரர்களையும் கழட்டி விட்டதால் அந்த அணிக்கு அதிரடியாக செயல்படக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை.
இதனை காரணமாக வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் குயின்டன் டி காகை தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.