ஷர்துல் தாகூர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் அதிரடியாக செயல்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை சென்னை அணிக்காக விளையாடிய ஷர்துல் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார், இருந்தபோதும் 4 வீரர்களை மட்டுமே தனது அணியில் தக்க வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் ஷர்துல் தாகூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கழட்டி விட்டது, இருந்தபோதும் வருகிற ஏலத்தில் மீண்டும் இவரை தனது அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
