வெங்கடேஷ் ஐயர்
2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கியமான காரணமாக திகழ்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் 2022 ஐபிஎல் தொடர்பான தனது அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது.
மிகப் பெரிய வீரராக வலம் வருவார் என்று பலராலும் பாராட்டப்பட்ட வெங்கடேச ஐயர், 2022 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடும் லெவனில் இருந்து நீக்கியுள்ளது.
