தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருட தொடரின் துவக்கமே மிக மோசமாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலுமே படுதோல்வியையே சந்தித்துள்ளது.
மூன்று தொடர் தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை (9-4-22) நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டிக்கான சென்னை அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
5 – முகேஷ் சவுத்ரிக்கு பதில் ஹங்ரேக்கர்;
தீபக் சாஹர் காயத்தில் இருந்து குணமடையாததால், அவரது இடத்தில் யாரை களமிறக்குவது என்பது சென்னை அணியில் பெரிய பிரச்சனையாக நிலவி வருகிறது. அவரது இடத்தில் களமிறங்கும் முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பியே வருகிறார், ஒரு ஓவர் ஓரளவிற்கு போட்டாலும், அடுத்த ஓவரில் அதிகமான ரன்களை வழங்கிவிடும் இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுப்பதே சென்னை அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.