4- பிராவோவிற்கு பதில் மகேஷ் தீக்ஷன்னா;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக பிராவோ திகழ்ந்தாலும், அவர் கடந்த இரண்டு போட்டியிலுமே தலா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். கடந்த போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, சென்னை ரசிகர்களின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பிராவோ முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே பிராவோ பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த இரண்டு போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாத பிராவோவிற்கு ஓரிரு போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டு அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வீரரான மகேஷ் தீக்ஷன்னாவிற்கு வாய்ப்பு கொடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என தெரிகிறது.
பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான ஆள் இல்லாமல் சென்னை அணி தடுமாறி வருவதால், தீக்ஷன்னா பவர்ப்ளே ஓவர்களை வீசுவதற்கு சரியான நபர் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இதுவரை 15 சர்வதேச டி.20 போட்டிகளில் விளையாடியுள்ள தீக்ஷன்னா அதில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.