3- ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் வரிசை;
பினிசிங்கிற்கு பெயர் போன ரவீந்திர ஜடேஜா, கடந்த இரண்டு போட்டியிலும் 5வது இடத்தில் களமிறங்கினார், 5வது இடத்தில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ஜடேஜா பேட்டிங்கில் சொதப்புவதற்கு அவர் மீதான கேப்டன்சி அழுத்தம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் சென்னை நிர்வாகம் ஜடேஜாவை 6வது இடத்தில் களமிறக்கி, அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிப்பது மட்டுமே சென்னை அணிக்கு பயனுள்ளதாக அமையும். சிவம் துபேவை ஐந்தாவது இடத்தில் களமிறக்கிவிட்டு, ஜடேஜா 6வது இடத்தில் களமிறங்குவதே சரியான முடிவாக இருக்கும்.
பெரும்பாலும் 6வது இடத்தில் களமிறங்கும் ஜடேஜா இதுவரை (59 இன்னிங்ஸ்) 1000 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.