Use your ← → (arrow) keys to browse
1 – துவக்க வீரராக அம்பத்தி ராயூடு;
டூபிளசிஸிக்கு பதிலாக சென்னை அணியில் எடுக்கப்பட்ட டெவன் கான்வே, முதல் போட்டியிலேயே சொதப்பியதால் அவருக்கு கடந்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். துவக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவரை விட அம்பத்தி ராயூடுவே சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்க சரியான நபர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 15 முறை துவக்க வீரராக களமிறங்கியுள்ள அம்பத்தி ராயூடு அதில் 431 ரன்கள் குவித்துள்ளார். எனவே அம்பத்தி ராயூடுவை துவக்க வீரராக களமிறக்கிவிட்டு, ராபின் உத்தப்பாவை மூன்றாவது இடத்தில் களமிறக்குவதே சென்னை அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும்.
Use your ← → (arrow) keys to browse