தப்ரிஸ் ஷம்சி
சிறந்த டி20 பந்துவீச்சாளர் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணியின் ஷம்சி,2022 ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிக்கும் தேர்வாகவில்லை. இது அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இருந்தபோதும், இவர் மீதான கண் அனைத்து அணிகளுக்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது, இதன் காரணமாக இவரை 2022 ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணி மாற்று வீரராக தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
