சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரியின் வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் விளையாடிய இளம் வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகுக்கு தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
அப்படி சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர்களுடைய கிரிக்கெட் கரியர் உதவும்படியும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டுகளையும் சரியான ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.
முகேஷ் சவுத்திரி குறித்த ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “நியூ பாலில் சிறப்பாக பந்து வீசிய வீரர் என்றால் அது என்னைப்பொறுத்தவரையில் முகேஷ் சவுத்ரி தான், அவர் இந்த தொடரில் டெத் ஓவர்களில் பந்து வீசுவதை நம்மால் காணமுடிந்தது, இடதுகை பந்துவீச்சாளர்களுக்கே உரித்தான ஆங்கிலில் அவர் பந்து வீசினார். நியூ பாலில் பந்துவீசி கொண்டிருந்த முகேஷ் சவுத்ரியை, கேப்டன் தோனி மெல்லமெல்ல டெத் ஓவர்களில் பந்து வீசுவதற்கு தயார்படுத்தியுள்ளார்.நெட் பவுலராக அறிமுகமான இவர் தற்போதய சென்னை அணியில் தீபக் சஹர் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ளார்.முகேஷ் சவுத்ரி மிக சிறப்பாக பவர் பிளேயில் பந்து வீசியுள்ளார், அவர் புது பந்தை கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது, இது அனைத்துமே தோனியில் திட்டம் என்று கூறலாம் முதலில் அவரை நியூ பாலில் அதிகமாக பந்துவீச செய்தார், பின் மெல்ல மெல்ல 14 மற்றும் 15வது ஓவரில் பந்துவீச செய்தார், பின் முகேஷ் சவுத்ரியை 19 மற்றும் 20ஓவரில் பந்து வீச கொடுத்துள்ளார்.இதை அனைத்தையும் முகேஷ் சவுத்ரி மிக கச்சிதமாக செய்துள்ளார் ” என்று ஆகாஷ் சோப்ரா முகேஷ் சவுத்ரியை பாராட்டி பேசியிருந்தார்.
இந்த தொடரில் முகேஷ் சவுத்ரி சென்னை அணிக்காக 16 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.