புதிய அணி... மீண்டும் பழைய பொறுப்பு; அம்பத்தி ராயூடுவிற்காக போட்டி போடப்போகும் அணிகள் !! 1

2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பட்டியலில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ளார்.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அம்பத்தி ராயுடு 2022 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில்,இவரை சென்னை அணி தக்கவைக்காமல் நீக்கிவிட்டது,இருந்த போதும் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் மீண்டும் அம்பத்தி ராயுடுவை தனது அணியில் சென்னை அணி இணைத்துக் கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வந்த நிலையில் அம்பத்தி ராயுடு 2022 ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பட்டியலில் பதிவிட்டுள்ளார்.

புதிய அணி... மீண்டும் பழைய பொறுப்பு; அம்பத்தி ராயூடுவிற்காக போட்டி போடப்போகும் அணிகள் !! 2

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு, சென்னை அணியில் தோனி இல்லாத சமயங்களில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார்.

ஆனால் பெரும்பாலான ரசிகர்களால் அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமே பார்க்கப்பட்ட ராயுடு 2022ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று பதிவிட்டுள்ளாது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த அம்பத்தி ராயுடு, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி விளையாடி வருகிறார்.

புதிய அணி... மீண்டும் பழைய பொறுப்பு; அம்பத்தி ராயூடுவிற்காக போட்டி போடப்போகும் அணிகள் !! 3

36 வயதாகும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.வயதானால் இவருடைய பேட்டிங் திறமை இன்னும் குறையவில்லை.

இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்துள்ள அதிரடி வீரர் அம்பத்தி ராயுடுவை நிச்சயம் சென்னை அணி உட்பட சில அணிகள் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *