2022 ஐபிஎல் தொடர் காண ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி என்ற அவப்பெயரை சம்பாதித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து இந்த தொடரையாவது கைப்பற்ற வேண்டுமென்று முனைப்பில் உள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டார்கெட் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
சுப்மன் கில்
ஐபிஎல் தொடரில் 58 போட்டிகளில் பங்கேற்று 1417 ரன்கள் எடுத்துள்ள இளம் வீரர் சுப்மன் கில் , நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடினார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைசதமடித்து அசத்திய இவரை நிச்சயம் வரும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகை கொடுத்து சில அணிகள் ஒப்பந்தம் செய்யப் படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் வருகிற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிச்சயம் இவரை டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
