மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறலாம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வான மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், டி20 தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராகவே கிட்டத்தட்ட மாறிவிட்டார் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், எதிர்வரும் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த இரண்டு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிர்க்கு இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறுவதற்கு மற்றுமொரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை உள்ளடக்கிய அணியாகவே பெரும்பாலும் இருக்கும்.இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது வாய்ப்பை உறுதி செய்துவிடலாம்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தார்.

மேலும் டெல்லி அணிக்கு தேர்வாகியுள்ள ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், டேவிட் வார்னர் யாருக்காகவும் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது, கடந்த ஆண்டு டேவிட் வார்னருக்கு சிறப்பாக அமையவில்லை, இது அனைத்து கிரிக்கெட்டருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான், நிச்சயம் டேவிட் வார்னர் தனது அபாரமான பேட்டியின் மூலம் டெல்லி அணிக்கு மிகப் பெரும் பக்கபலமாக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.