எல்லா பாராட்டும் பெறுவதற்கு மிகத் தகுதியான வீரர் இவர்தான் ; ரவி சாஸ்திரி பாராட்டு !! 1

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய திறமை படைத்த ஷிகர் தவான், எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் தன்னுடைய நிலையான பார்மால் தனது அணிக்கு ரன்களை குவித்து கொடுக்க கூடியதில் வல்லவர்.

எல்லா பாராட்டும் பெறுவதற்கு மிகத் தகுதியான வீரர் இவர்தான் ; ரவி சாஸ்திரி பாராட்டு !! 2

எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதனை சமாளித்து பேட்டிங் செய்யக்கூடிய ஷிகர் தவான், மற்ற வீரர்களைப் போல் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை.

என்னதான் ஒரு வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதற்கான பாராட்டை அவர் பெற்றால்தான் அது அவர் மென்மேலும் வளர உதவியாக இருக்கும், ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்தப் பாராட்டு என்பது ஒருதலைபட்சமாகவே உள்ளது.

இந்த நிலையில்,இதனை சுட்டிக் காட்டும் வகையில் இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஷிகர் தவான் குறித்து பாராட்டு பேசியுள்ளார்.

எல்லா பாராட்டும் பெறுவதற்கு மிகத் தகுதியான வீரர் இவர்தான் ; ரவி சாஸ்திரி பாராட்டு !! 3

இதுகுறித்து அவர் பேசுகையில், “ நான் ஷிகர் தவானை கன் பிளேயர் (gun player) என்றுதான் அழைப்பேன், இந்த நாட்டில் அதிகமான பாராட்டுக்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் தான் கிடைத்துள்ளது.ஆனால் ஷிகர் தவான் இதற்கு முழு தகுதி வாய்ந்த ஒரு வீரர்,மேலும் ஷிகர் தவான் ஒரு சீரியசான வீரர் அவர் உடற் தகுதியோடு உள்ளார், மேலும் அனைத்து பாராட்டுகளையும் பெறுவதற்கு தகுதியான வீரராக இருக்கிறார். தற்போதைய ஐபிஎல் தொடரில் 200போட்டிகளை கடந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள ஷிகர் தவான், பலமுறை அணியை வெற்றி பெறச் செய்து மேன் ஆப் தி மேட்ச் பட்டமும் பல வென்றுள்ளார், தற்பொழுது அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அவருடைய பேட்டிங் புல்லாங்குழல் வாசிப்பது போன்றதாகும், நிச்சயம் ஷிகர் தவான் நீண்டநாட்கள் புல்லாங்குழல் வாசிப்பார் என்று ரவி சாஸ்திரி ஷிகர் தவானை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.