வந்துட்டேன்னு சொல்லு.... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு; மகிழ்ச்சியில் டேவிட் வார்னர் !! 1

ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி அணியில் தேர்வானது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான டேவிட் வார்னர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.

தனது அபாரமான பேட்டிங் திறமை மூலம் டெல்லி அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர்,சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிக்கு எதிராக அடுத்தடுத்த சதங்கள் அடித்து அசத்தினார்.

வந்துட்டேன்னு சொல்லு.... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு; மகிழ்ச்சியில் டேவிட் வார்னர் !! 2

பின் 2014ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் அடுத்த ஆண்டே ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு கேப்டன் பதவி கிடைத்த அடுத்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2016ஆம் ஆண்டு டைட்டில் பட்டத்தையும் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

துவக்க வீரராகவும், ஒரு கேப்டனாகவும் தனது அபாரமான திறமையின் மூலம் தனது அணிக்கு பலமுறை வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வார்னரை 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஹைதராபாத் அணி 2021தொடரின் பாதியிலேயே அணியிலிருந்து நீக்கியது.சமகால கிரிக்கெட் தொடரின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் டேவிட் வார்னரை இப்படி செய்தது சரியான முறை இல்லை என்று ரசிகர்கள் உட்பட பலரும் தனது ஹைதராபாத் அணிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

வந்துட்டேன்னு சொல்லு.... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு; மகிழ்ச்சியில் டேவிட் வார்னர் !! 3

சர்ச்சையின் காரணமாக ஹைதராபாத் மணி வரை 2022 ஐபிஎல் தொடரில் தக்கவைத்து என்று எதிர்பார்க்கப்பட்டது, அதேபோன்று ஹைதராபாத் அணி வார்னரை தக்கவைக்கவில்லை,ஹைதராபாத் தேர்ந்தெடுக்க இல்லை என்றாலும் மற்ற அணிகள் இவரை தனது அணியில் தேர்ந்தெடுப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று(12-02-2022) நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற வார்னரை எடுக்க குஜராத், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் முன்வந்தன. இறுதியில் டெல்லி அணி அவரை போராடி 6.25 கோடி ரூபாய்க்கு எடுத்துவிட்டது.

https://twitter.com/DelhiCapitals/status/1492446354333118464?s=20&t=uugUSuRirGIRxN0SsM8pvw

10 கோடி ரூபாய் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் குறைந்த மதிப்பில் டேவிட் வார்னர் சாமர்த்தியமாக டெல்லி அணி தட்டி சென்றது. டெல்லி அணியின் கேப்டனாக நியமிப்பதற்காகவே வார்னரை டெல்லி அணி தேர்ந்தெடுத்துள்ளது என்று சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான், டெல்லி அணியில் தேர்வானது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வார்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,“ஹாய் டெல்லி ரசிகர்களே நான் எங்கிருந்து எனது ஐபிஎல் பயணத்தை ஆரம்பித்தேனோ அங்கே மீண்டும் திரும்பி விட்டேன், தற்பொழுது உங்கள் அனைவரையும் இந்தியாவில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று டேவிட் வார்னர் அதில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *