வாய்ப்பு கொடுத்த பிறகு முடிவு செஞ்சுக்கோங்க மனதில் உள்ளதை போட்டுடைத்த உமேஷ் யாதவ்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இறுதியாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் தொடரிலும், 2018 ஆம் ஆண்டு டி20 தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதற்குப்பின் இவருக்கு இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

தற்போது டெஸ்ட் தொடருக்கான பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கப்படுப் உமேஷ் யாதவ், செய்தியாளர்கள் சந்திப்பில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோமா..? இல்லையா..? என்பது தெரியும் என்று பேசியுள்ளார்.

இதுகுறித்த அவர் பேசுகையில், நான் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளேன், இதனால் பலரும் எனக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடத் தெரியாது என்று நினைத்துக் கொண்டுள்ளனர், கடந்த 2020 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினேன், அதற்குப்பின் டெல்லி அணியில் சேர்ந்து ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிற்காகவும், ஐபிஎல் தொடரிலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நான் விளையாடவில்லை, வாய்ப்பு கொடுத்தால் தான் எங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறதா என்பது தெரியும். சிலர் ரெட் பால்- ஒயிட் பால் வீரர்கள் என பிரித்து வைத்துள்ளார்கள், ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை, நான் என்னை மட்டும் கூறவில்லை என்னை போன்ற பல அனுபவம் வீரர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டுள்ளது என்று உமேஷ் யாதவ் தெரியப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான உமேஷ் யாதவ், 2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.