அதிக பணத்தால் தான் இஷான் கிஷனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் இஷான் கிஷன் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் இந்திய வீரர் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த வருடம் கோப்பையை கைப்பற்றுவதற்கும் மிகப் பெரும் உதவியாக இருந்தார்.
இதனால் இவரை மும்பை அணி அதிக எதிர்பார்ப்புடன் 2022 ஐபிஎல் தொடரில் 15.25 கோடிக்கு தனது அணியில் ஒப்பந்தம் செய்தது, ஆனால் இவர் நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் அந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை,துவக்க வீரரான இவர் வெறும் 418 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இருந்தபோதும் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறாததால் இவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது,இதை சரியாக பயன்படுத்திய இவர் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் .
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறிய இஷான் கிஷன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படும் இஷான் கிஷன் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாததன் காரணத்தை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில்தேவ் தெரிவித்ததாவது, 15 கோடி ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தான் இஷான் கிஷன் மிகப்பெரும் நெருக்கடியை உணர்ந்தார், இதை அனைத்து நேரத்திலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் இஷான் கிஷன் விஷயத்தில் இது தான் உண்மை, ஒரு வீரர் சிறப்பாக செயலபட்டுவிட்டால் அதை அவரிடம் மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பார்கள். அவரால் இவ்வளவு அதிக தொகையை பெற முடிந்தால் நிச்சயம் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கும், சிறப்பாக செயல்படாத ஒரு வீரருக்கு எந்த ஒரு அணியும் இவ்வளவு தொகையை செலவு செய்யாது,இஷான் கிஷன் உண்மையில் கொடுத்து வைத்தவார்,இதன் காரணமாக தான் இஷான் கிஷன் அதிக நெருக்கடியை உணர்கிறார்.இந்த நிலையை அவர் சமாளித்து தான் ஆக வேண்டும்,இதே போன்ற நிலையை ஏற்கனவே யுவராஜ் சிங் சந்தித்தார் என்று கபில் தேவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.