சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கும் இடம்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது !! 1

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கும் இடம்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது !! 2

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கும் இடம்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது !! 3

ஐபிஎல் வரலாற்றின் அடையாளமாக திகழ்ந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விலை போகாத சின்ன தல சுரேஷ் ரெய்னா, வர்ணைனையாளராக செயல்பட உள்ளதை ஐபிஎல் நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் வர்ணனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி சேனலின் வர்ணனையார்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழில் வழக்கம் போல் ஆர்.ஜே பாலாஜி, முத்து, பத்ரிநாத், அபினவ் முகுந்த், பாவனா, ஸ்ரீகாந்த போன்றவர்கள் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் 2022ம் தொடருக்கான தமிழ் வர்ணனையாளர்கள் குழு;

முத்துராமன், ஆர்.கே, பாவனா, பாலாஜி, பத்ரிநாத், அபினவ் முகுந்த், ரமேஷ், நானி, ஸ்ரீகாந்த்.

ஐபிஎல் 2022ம் ஆண்டு தொடருக்கான ஹிந்தி வர்ணனையாளர்கள் குழு;

ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், கவுதம் கம்பீர், பார்த்தீவ் பட்டேல், நிக்கில் சோப்ரா, தன்யா புரோஹித், கிரன் மோர், ஜடின் சப்ரு, சுரேன் சுந்தரம், ரவி சாஸ்திரி, சுரேஷ் ரெய்னா.

இதே போன்று ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு என மொத்தம் 8 மொழிகளுக்கான வர்ணனையார்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *