டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கூடுதல் பலத்துடன் களமிறங்கியுள்ளது. செஃப்ரெட் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இடம்பிடித்துள்ளார். அதே போல் கலீல் அஹமத் மற்றும் மந்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணியின் அசுரவேக பந்துவீச்சாளரான அன்ரிக் நோர்கியா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. மணிஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்பராஷ் கான், லலித் யாதவ், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான். அன்ரிக் நோர்கியா.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி;
கே.எல் ராகுல், டி காக், ஈவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயூஸ் பதோனி, க்ரூணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம், ஆண்ட்ரியூ டை, ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான்.