பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய லிவிங்ஸ்டன்; 189 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் !! 1

குஜராத் டைட்டன் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 16வது போட்டியான இன்றைய போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய லிவிங்ஸ்டன்; 189 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் !! 2

 

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான மாயன்க் அகர்வால் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய லிவிங்ஸ்டன்; 189 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் !! 3

இதன்பின் களத்திற்கு வந்த அதிரடி ஆட்டக்காரரான ஜானி பாரிஸ்டோ வெறும் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்து காட்டடி அடித்த லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார். ஜித்தேஷ் சர்மா 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் பொறுப்பாக விளையாடிய ராகுல் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் அணி 189 ரன்கள் குவித்துள்ளது.

பேட்டிங்கில் மீண்டும் மிரட்டிய லிவிங்ஸ்டன்; 189 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் !! 4

குஜராத் அணியில் அதிகபட்சமாக ரசீத் கான் 3 விக்கெட்டுகளையும், தர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ராகுல் திவாட்டியாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *