தரமான வீரருக்கு வாய்ப்பு கொடுத்த மும்பை இந்தியன்ஸ் ; பந்துவீச்சை தேர்வு செய்தது பெங்களூர் அணி !! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி அதீத தைரியத்துடனும், வேறு வழியின்றியும் வெறும் இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய தைமல் மில்ஸ் மற்றும் டேனியல் சம்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தரமான இளம் வீரரான ரமன்தீப் சிங்கும், ஜெயதேவ் உடான்கட்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியில் கிளன் மேக்ஸ்வெல் எண்ட்ரீ கொடுப்பதால், ரூத்தர்போர்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டேவல்ஸ் பெர்வீஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொலார்ட், ரமன்தீப் சிங், முருகன் அஸ்வின், ஜெயதேவ் உனாட்கட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பாசில் தம்பி.

இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி;

டூபிளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், சபாஷ் அகமத், தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லே, வானிது ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *