ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா...? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 5

குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில், 4 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா...? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 6

தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு பிறகு, பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று (17-4-22) நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா...? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 7

கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டிக்கான சென்னை அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. துவக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பினாலும் அவருக்கான வாய்ப்பு இந்த போட்டியிலும் மறுக்கப்படாது என்றே தெரிகிறது. எனவே துவக்க வீரர்களாக வழக்கம் போல் ருத்துராஜ் கெய்க்வாட்டும், ராபின் உத்தப்பாவுமே களமிறங்குவார்கள்.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா...? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 8

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சிவம் துபே ஆகியோர் தொடர்ந்து தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்து வருவதால், மிடில் ஆர்டரில் மாற்றத்தை ஏற்படுத்த சென்னை அணியால் யோசிக்க கூட முடியாது.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வழக்கம் போல் ஜடேஜா மற்றும் பிராவோவே களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்கள் வரிசையில், மகேஷ் தீக்‌ஷன்னா மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் கடந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசியதால் அவர்களை ஆடும் லெவனில் இருந்து நீக்கும் முடிவை சென்னை நிர்வாகம் எடுக்காது என்றே தெரிகிறது, இதனால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா...? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 9

குஜராத் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி விக்கெட் கீப்பர்), அம்பத்தி ராயூடு, சிவம் துபே, மகேஷ் தீக்‌ஷன்னா, முகேஷ் சவுத்ரி, டூவைன் பிராவோ,கிரிஸ் ஜோர்டன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *