மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. மொய்ன் அலி மற்றும் கிரிஸ் ஜோர்டன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டூவைன் ப்ரெடோரியஸ் மற்றும் மிட்செல் சாட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்னர்.
அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. டேனியல் சம்ஸ், மெரிடித் மற்றும் ஹிர்திக் சோக்கீன் ஆகியோர் இன்றைய போட்டிக்கான மும்பை அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டீவல்ட் பெர்வீஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொலார்ட், டேனியல் சம்ஸ், ஹிர்திக் சோக்கீன், ரிலே மெரிடித், ஜெயதேவ் உனாட்கட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.
இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, டூவைன் ப்ரெடோரியஸ், மிட்செல் சாட்னர், மகேஷ் தீக்சன்னா, முகேஷ் சவுத்ரி.