ஒரு வழியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் விஜய் சங்கர்... கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது குஜராத் !! 1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஒரு வழியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் விஜய் சங்கர்... கொல்கத்தாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது குஜராத் !! 2

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத விஜய் சங்கர் இன்றைய போட்டிக்கான குஜராத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதே போல் இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. டிம் சவுத்தி, சாம் பில்லிங்ஸ் மற்றும் ரின்கு சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;

வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ரின்கு சிங், ரசல், டிம் சவுத்தி, சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவன்;

விர்திமான் சஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரசீத் கான், அல்ஜாரி ஜோசப், லோகி பெர்குசன், யஸ் தயால், முகமது ஷமி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *