ஜடேஜாவிற்கு பதில் யார்...? மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரின் துவக்கத்தில், ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ஜடேஜாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. ஜடேஜா தலைமையில் மொத்தம் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகள் அனைத்திலும் படுதோல்வியை சந்தித்தது.

ஜடேஜாவிற்கு பதில் யார்...? மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் படுதோல்விகளை தொடர்ந்து, சென்னை அணி மீதும், ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சி மீதும் கடும் விமர்ச்சனங்கள் எழுந்தது. இதனால் ரவீந்திர ஜடேஜா திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இதனால் சென்னை அணியின் கேப்டன் பதவி மீண்டும் தோனியிடமே ஒப்படைக்கப்பட்டது.

தோனி தலைமையில் இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்றது.

ஜடேஜாவிற்கு பதில் யார்...? மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 3

 

டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஜடேஜாவிற்கு பதில் யார்...? மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணி இது தான் !! 4

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடாத ஜடேஜா காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதால், சிவம் துபேவே இந்த போட்டிக்கான அணியிலும் இடம்பெறுவார் என தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, மொய்ன் அலி, தோனி, சிவம் துபே, டூவைன் பிராவோ, மகேஷ் தீக்‌ஷன்னா, சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி.

Leave a comment

Your email address will not be published.