அணியில் மூன்று அதிரடி மாற்றம்; முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

அணியில் மூன்று அதிரடி மாற்றம்; முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. மிட்செல் சாட்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொய்ன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் காயம் காரணமாக ஆடம் மில்னே இன்றைய போட்டியில் விளையாடவில்லை. தென் ஆப்ரிக்கா அணியின் டூவைன் பெரிட்ரியோஸ் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். அதே போன்று முகேஷ் சவுத்ரி என்னும் வீரரும் இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. மொஹ்சின் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆண்ட்ரியூ டை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, டூவைன் பிராவோ, டுவைன் ப்ரேடோரியஸ், முகேஷ் சவுத்ரி, துசார் தேஸ்பாண்டே.

லக்னோ அணியின் ஆடும் லெவன்;

கேஎல் ராகுல், டி காக், ஈவின் லீவிஸ், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, அயூஸ் பதோனி, க்ரூணல் பாண்டியா, துஸ்மந்தா சமீரா, ஆண்டிர்யூ டை, ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *