இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 1

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருடத்திற்கான தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.

முதல் போட்டிக்கான சென்னை அணியின் இடம்பெற்றிருந்த சில வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட விளையாடவில்லை என்பதால், அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை (31-3-22) நடைபெறும் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

துவக்க வீரர்கள் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் டேவன் கான்வே ம்ற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவர்.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 3

மிடில் ஆர்டரில் ஒரு மாற்றத்துடன் சென்னை அணி களமிறங்கும். விசா கிடைப்பதில் தாமதமானதால் கடந்த போட்டியில் விளையாடாத மொய்ன் அலி, இந்த போட்டிக்கான அணியில் இடம்பிடிப்பார். மொய்ன் அலி மூன்றாவது இடத்திலும், ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயூடு ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் களமிறங்குவார்கள்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ ஆகியோர் களமிறங்குவார்கள். மொய்ன் அலிக்கு இடம் கொடுக்கப்பட்டால், மிட்செல் சாட்னர் அணியில் இருந்து நீக்கப்படுவார். அதே போல் சிவம் துபேவிற்கும் இந்த போட்டிக்கான சென்னை அணியில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அதே போல் ஆடம் மில்னே மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோரும் இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள்.

லக்னோ அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டேவன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, தோனி, ஜடேஜா, டூவைன் பிராவோ, ராஜவர்தன் ஹங்ரேக்கர், ஆடம் மில்னே, துசார் தேஸ்பாண்டே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *