முகமது சிராஜ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்த முகம்மத் சிராஜ் 2021 ஐபிஎல் தொடரில் தான் யார் என்பதை இந்த கிரிக்கெட் உலகிற்கு தெரியப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த முறையில் பந்து வீச கூடிய திறமை படைத்த முகமது சிராஜ், தன்னால் டி20 தொடரிலும் மிக சிறந்த முறையில் விளையாட முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் இந்த தொடரில் மிகச் சிறந்த முறையில் விளையாடினார்.
இருந்தபோதும் மூன்று வீரர்களை மட்டும்தான் ஒரு அணி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால் முகமது சிராஜை பெங்களூரு அணி விடுவித்து விட்டு பின் மீண்டும் ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
