2021 ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி மிக மோசமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எந்த வீரரை தனது அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம், மேலும் இணைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது
மேலும் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்படுவது ஒவ்வொரு அணியும் புது உத்திகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் பிசிசிஐ விதிப்படி ஒரு அணி 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கும் 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
கே எல் ராகுல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுலை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்காது, 2021 ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக செயல்பட்ட கே எல் ராகுல் 13 போட்டிகளில் பங்கேற்று 626 ரன்கள் அடித்து அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் 2022 கானா ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி முதல் ஆளாக கேஎல் ராகுல் தான் தக்க வைத்துக்கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
