இருந்தே ஒரே நம்பிக்கையையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் ; ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சூர்யகுமார் யாதவ் !! 1

தனியாக போராடி பல போட்டிகளில் மும்பை அணியின் மானம் காத்த சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த வருடத்திற்கான நடப்பு தொடரில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

இருந்தே ஒரே நம்பிக்கையையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் ; ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சூர்யகுமார் யாதவ் !! 2

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது.

பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருவதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் பல போட்டிகளில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்பினாலும், பல போட்டிகளில் தன்னந்தனியாக போராடி மும்பை அணியின் மானத்தை சூர்யகுமார் யாதவே காத்து வந்தார்.

இருந்தே ஒரே நம்பிக்கையையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் ; ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சூர்யகுமார் யாதவ் !! 3

குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ், நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு தொடர் துவங்குவதற்கு முன்பும் காயத்தால் அவதிப்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்த 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதில் 303 ரன்கள் குவித்துள்ளார், அதில் 3 அரைசதமும் அடங்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *