ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீஸன் வருகிற ஏப்ரல் 2வது வாரம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ஏறும் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட இருக்கிறது.
ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சம் 4 வீரர்கள் என, தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ளன. புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளுக்கும் மீதமுள்ள வீரர்களில் அதிகபட்சம் 3 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இறுதிப் பட்டியலை இரு அணிகளும் இன்னும் வெளியிடவில்லை.
முன்னணி வீரர்கள் பலர் இம்முறை தக்க வைக்கப்படாமல் ஏலத்திற்கு தள்ளி விடப்பட்டுள்ளனர். இவர்களை எடுப்பதற்கு ஒவ்வொரு அணியும் திட்டங்கள் வகுத்து வருகின்றன. மேலும் எத்தனை கோடிகள் கொடுத்தால் சரிவரும் என பல கணக்குகளை போட்டு வருகின்றன.
டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் இம்முறை தக்க வைக்கப்படவில்லை. மிடில் ஆர்டரில் இவ்ர் நன்றாக விளையாடி வருவதால், இவரை எடுப்பதற்கு முன்னணி அணிகள் பல கோடிகளில் கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கின்றன. இந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
பத்திரிக்கை ஒன்றிற்கு ஐபிஎல் அணியின் திறனாய்வாளர் ஒருவர் அளித்த பேட்டியின் போது, “கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரை பெங்களூரு அணிக்கு கொண்டுவருவதற்கு அணி நிர்வாகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் நல்ல பார்மில் இருப்பதாக விராட் கோலி உணர்ந்திருக்கிறார். ஆகையால் அதிகபட்சம் பத்து கோடி வரை கொடுத்து அவரை எடுப்பதற்கு விராட்கோலி அனுமதிதுள்ளதாக நிர்வாகத்திடம் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.” என கூறியுள்ளார்.
இதனை வைத்து பார்க்கையில், ஸ்ரேயாஸ் அய்யர் பெங்களூரு அணிக்கு சென்று விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் அவரை கேப்டனாக நியமிக்கவும் பெங்களூர் அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விராட் கோலி இடமும் ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் ஏலம் முடியும்வரை நாம் பொறுத்திருந்துதான் இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.