ரெய்னாவிற்கு வாய்ப்பே இல்லை... இந்த நான்கு வீரர்கள் மட்டும் போதும்; அதிரடி முடிவை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 15வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாத துவக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெய்னாவிற்கு வாய்ப்பே இல்லை... இந்த நான்கு வீரர்கள் மட்டும் போதும்; அதிரடி முடிவை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால் ஒவ்வொரு அணியும் எந்த எந்த வீரர்களை தக்க வைத்து கொள்வது என்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

ரெய்னாவிற்கு வாய்ப்பே இல்லை... இந்த நான்கு வீரர்கள் மட்டும் போதும்; அதிரடி முடிவை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் !! 3

இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப்பட வாய்ப்புகள் இல்லை என தெரியவந்துள்ளது.

ரெய்னாவிற்கு வாய்ப்பே இல்லை... இந்த நான்கு வீரர்கள் மட்டும் போதும்; அதிரடி முடிவை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் !! 4

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2022 சீசனில் சென்னை அணி நிர்வாகம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி தான் சென்னை அணியின் முதல் சாய்ஸ் என தெரிகிறது. தோனி உடன் ருதுராஜ், டூப்ளசிஸ் மற்றும் ஜடேஜா எதிர்வரும் சீசனில் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *