அன்றிச் நோர்ட்சே, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஸ் போன்ற வீரர்கள் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் பார்க்க படுகிறது,ஏனென்றால் டெல்லி அணி பேட்டிங் பந்து வீச்சு என அனைத்திலும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக உள்ளது.

தன்னுடைய முதல் போட்டியிலேயே ஐந்து முறை டைடல் பட்டத்தை வென்ற மும்பை அணியை மிகவும் எளிதாக வீழ்த்திய டெல்லி அணி, இரண்டாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன் அணியுடன் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்கு காரணமாக டெல்லி அணி பவர் ப்ளே ஓவரில் சொதப்பியது தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அணியை மேலும் மெருகேற்ற நட்சத்திர வீரர்கள் பலர் அணியில் இணையவுள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்தியாளர் சந்திப்பில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், காயத்திலிருந்து குணமான தென்ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்சே பயிற்சியின் போது 100%சிறப்பாக செயல்படுகிறார், நோர்ட்சே 4 அல்லது 5 ஓவர்கள் பந்துவீசும் அளவிற்கு முன்னேறியுள்ளார்,தற்போது இவருக்கு தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டும், தென்ஆப்பிரிக்கா அணி அனுமதித்தால் இன்னும் சில நாட்களில் அவர் அணியில் இணைந்து விடுவார், இன்னும் அடுத்த போட்டிகளுக்கு சில நாட்களே உள்ளது என்றும் ரிக்கி பாண்டிங் பேசியிருந்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மும்பையிலிருந்து கிளம்பி விட்டதால் அடுத்த போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர் இடம் பெறுவார், மேலும் மிச்செல் மார்ஸ் மும்பைக்கு சில தினங்களுக்கு முன்பு வந்தடைந்தார் இவர் தனிமைப்படுத்தப்பட்ட பின் மீண்டும் அணியில் இணைவார், 10ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மிச்செல் மார்ஸ் டெல்லி அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ரிக்கி பாண்டிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.