கொல்கத்தா அணி செய்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்; குல்தீப் யாதவ் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 1

கொல்கத்தா அணி குல்தீப் யாதவிர்க்கு போதுமான வாய்ப்பு வழங்கவில்லை என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்குபெற்ற குல்தீப் யாதவிர்க்கு, கொல்கத்தா அணி அவ்வளவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் அளிக்க வில்லை.

இந்திய அணியின் சீனர் வீரரான குல்தீப் யாதவை ஏன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓரம் கட்டுகிறது, என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்த அளவுக்கு இவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

கொல்கத்தா அணி செய்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்; குல்தீப் யாதவ் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 2

பின் 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் யாதவை டெல்லி கேப்பிடல் அணி தனது அணியில் இணைத்துக் கொண்டது.

அணியில் இணைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் இந்த தொடரில் குல்தீப் யாதவை டெல்லி அணியின் ரெகுலர் வீரராகவும் களமிறக்கி வருகிறது.

இதை உணர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் குல்தீப் யாதவ் 2022ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கொல்கத்தா அணி செய்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம்; குல்தீப் யாதவ் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் !! 3

அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்தி வரும் குல்தீப் யாதவை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, குல்தீப் சிறந்த முறையில் விளையாடி வருகிறார் அவருக்கு ஏற்றார்போல் நாங்கள் சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளோம். கடந்த இரண்டு வருடங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடிய குல்தீப் யாதவிர்க்கு அவ்வளவாக வாய்ப்புகள் அளிக்கவில்லை ஏனென்றால் அந்த அணியில் சக்கரவர்த்தி நரேன் மற்றும் சாகிப் போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர், ஆனால் குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச தொடரிலும் ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் வீரர் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டி பேசியிருந்தார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *