பஞ்சாப் அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டால் வேற லெவலில் இருக்கும்; விருப்பத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் !! 1

பஞ்சாப் கிங்ஸ் அணி யாரை கேப்டனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசிய தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிக சிறந்த முறையில் தனது பங்களிப்பை கொடுத்த தமிழகத்தை சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக்கானை 2022 ஐபிஎல் தொடர் ஏலத்தில் கடுமையான போட்டிக்கு பின் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் தனது அணியில் இணைத்துள்ளது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டால் வேற லெவலில் இருக்கும்; விருப்பத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் !! 2

ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர் என தொடர்ந்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் அதிரடி வீரர் ஷாருக்கான், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு தனது அணியின் கேப்டனாக யார் பொறுப்பேற்று வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நிச்சயம் அணியில் புதிதாக இணைந்துள்ள இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் தான் கேப்டனாக அணியை வழிநடத்த வேண்டும்.ஏனென்றால் அவருடைய அனுபவம் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் என்று அதில் பேசியிருந்தார்.தவான் ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் பங்கேற்று ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் இதன் காரணமாகவே ஷாருக்கான் இந்த கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டால் வேற லெவலில் இருக்கும்; விருப்பத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் !! 3

ஷிகர் தவான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடினாலும், 2022 ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியில் இவரை தக்க வைக்க வில்லை, இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பக்காவாக திட்டம் தீட்டி தவானை 8.25 கோடிக்கு தனது அணியில் இணைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக துணை கேப்டனாக செயல்பட்ட மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில்,தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்ந்தெடுத்துள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் அணியில் தவான் கேப்டனாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *