சென்னை அணி இப்ப இருக்குற கண்டிசன்க்கு ஜெயிக்கிறது சந்தேகம் தான், போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 1

சென்னை அணியின் நிலைமை மோசமாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது, இதற்கு முக்கிய காரணம் சென்னை அணி வயதான வீரர்களை கொண்ட அணி என்று அனைவரும் சென்னை அணியை கிண்டல் செய்தனர்.

சென்னை அணி இப்ப இருக்குற கண்டிசன்க்கு ஜெயிக்கிறது சந்தேகம் தான், போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 2

ஆனால் அதனையெல்லாம் உடைத்தெரியும்படி சென்னை அணி, 2021 ஐபிஎல் தொடரில் டைட்டில் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் அதனைத் தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி 2021 ஐபிஎல் தொடரில் தனது அணியில் விளையாடிய வீரர்களை மீண்டும் தேர்வு செய்து கிட்டத்தட்ட பழைய அணியையே சென்னை அணி உருவாகியுள்ளது.

என்னதான் சென்னை அணியின் அனுபவ வீரர்கள் பலர் இருந்தாலும் 2022 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணி, சற்று பலவீனமாக பலவீனமாகவே இருக்கிறது என்றும், சென்னை அணியின் இந்த பார்முலா இனிமே வேலை செய்யாது என்றும் ஒரு சில கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் நிலைமை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சென்னை அணி இப்ப இருக்குற கண்டிசன்க்கு ஜெயிக்கிறது சந்தேகம் தான், போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 3

அதில் பேசிய அவர், “தற்பொழுது சென்னை அணியின் மீது எழும் மிகப் பெரும் கேள்வி அந்த அணியின் சீனியர் வீரர்களான தோனி,ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக உள்ளார்களா என்பதே..?, மேலும் அந்த அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டர் சிவம் துபே எந்த அளவிற்கு விளையாடுவார் என்றும் தெரியவில்லை என்று இர்பான் பதான் பேசியுள்ளார்.

சென்னை அணி இப்ப இருக்குற கண்டிசன்க்கு ஜெயிக்கிறது சந்தேகம் தான், போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 4

மேலும் தீபக் சஹர் குறித்து பேசிய இர்பான் பதான், சென்னை அணியில் தீபக் சஹர் இடம்பெறவில்லை என்றால், அது சென்னை அணிக்கு மிகப் பெரும் சிக்கலாகவே அமையும். தீபக் சஹருக்கு பதில் வேறு ஒரு மாற்று வீரரை அணியில் சேர்ப்பதால் அணியின் தன்மை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்றும் இர்பான் பதான் பேசியிருந்தார்.

இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.