இவர போய் சும்மா உட்கார வச்சிட்டீங்களே...? மும்பை அணியின் தோல்விகளுக்கு இவர் இல்லாதது தான் காரணம்; சேன் வாட்சன் சொல்கிறார் !! 1

மும்பை இந்தியன்ஸ் அணி டீம் டேவிட்டை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து பரிதாபமான நிலையில் உள்ளது.

இதுவரை 11 போட்டிகளில் எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 9 தோல்வியை தழுவி ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்று பிளே ஆப் சுற்று செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

இவர போய் சும்மா உட்கார வச்சிட்டீங்களே...? மும்பை அணியின் தோல்விகளுக்கு இவர் இல்லாதது தான் காரணம்; சேன் வாட்சன் சொல்கிறார் !! 2

இந்த மோசமான தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணி சரியான அணியை கட்டமைக்க வில்லை என்பதுதான் மேலும் ஒருசில வீரர்கள் தங்களது திறமையை காட்டுவதற்கு சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆரம்பகட்டத்தில் தொடர் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரும் தவறு என்ன என்பதை டெல்லி அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இவர போய் சும்மா உட்கார வச்சிட்டீங்களே...? மும்பை அணியின் தோல்விகளுக்கு இவர் இல்லாதது தான் காரணம்; சேன் வாட்சன் சொல்கிறார் !! 3

அதில்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் டிம் டேவிட் பேட்டிங் செய்ததை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது, எனக்கு மிகப் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் 2022 ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்டத்தில் அதிரடி வீரர் டிம் டேவிட்டிர்க்கு வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்தனர், ஒரு வீரரை அதிக தொகை கொடுத்து அணியில் இணைத்து விட்டு அவருக்கு ஒழுங்காக வாய்ப்பளிக்க வில்லை என்றால் எப்படி அவருடைய திறமையை வெளிப்படுத்துவார், என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும், அவர் ஒரு மிகச் சிறந்த வீரர் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை சரியாக பயன்படுத்தாமல் விட்டது தான் மிகப்பெரும் தவறு என்று ஷேன் வாட்சன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

Leave a comment

Your email address will not be published.