என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு போட்டிகள் இது மட்டும் தான்; விராட் கோலி ஓபன் டாக் !! 1

ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத தருணம் என்றால் அது இந்த இரண்டு தருணம் தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஐபிஎல் வாழ்க்கை

சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு போட்டிகள் இது மட்டும் தான்; விராட் கோலி ஓபன் டாக் !! 2

2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி, 2021 ஐபிஎல் தொடருக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற மாட்டேன் என்று அறிவித்து விட்டதால் வேறு வழியின்றி டூப்லசிஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட பெங்களூர் அணிக்காக விராட் கோலி 209 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.அதில் குறிப்பாக 2016ஆம் ஆண்டு நடைெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனியாளாக 973 ரன்கள் அடித்துள்ளார்,அதில் 4 சதங்களும் அடங்கும்.இந்த சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு போட்டிகள் இது மட்டும் தான்; விராட் கோலி ஓபன் டாக் !! 3

மறக்க முடியாத 2 சம்பவம்

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் சம்பந்தமாக தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் விராட் கோலி,ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத 2 சம்பவங்கள் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு போட்டிகள் இது மட்டும் தான்; விராட் கோலி ஓபன் டாக் !! 4

அதில்,“முதன் முதலாவதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியாகும் அந்த போட்டி என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, அதற்கடுத்தாக குவாலிபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி பெங்களூர் அணி வெற்றி பெற்ற அந்த தருணமாகும், அப்பொழுது நாங்கள் கொண்டாடிய அந்த விதத்தை எங்களால் மறக்கவே முடியாது. இருந்தபோதும் 2016ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது, அந்தத் தருணம் விராட் கோலி மனம் உடைந்து போய்விட்டதாக தெரிவித்தார்,அதேபோன்று அதே ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றில் தோல்வியைத் தழுவியது மனதை மிகவும் காயப் படுத்தியது என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *