இந்த இரண்டு பேருக்கும் திரும்ப இடம் கொடுத்தே ஆகனும்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 1

இந்திய அணித் தேர்வாளர்கள், குல்தீப் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர் கூட்டணியையும் எதிர் வரும் உலகககோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் கூட்டாளிகளாக வலம் வந்த குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு வீரர்களும் தோனியின் ஓய்வுக்கு பின் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.இதனால் இந்திய அணியின் ரெகுலர் ஸ்குவாடில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த இரண்டு பேருக்கும் திரும்ப இடம் கொடுத்தே ஆகனும்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 2

அவ்வப்போது இந்திய அணியில் இந்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய போதும் அதனை இவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரம்கட்ட பட்டனர்.

மிக மோசமான பார்மால் அவதிப்பட்டு வந்த இந்த இரண்டு வீரர்களும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 2022 ஐபிஎல் தொடரில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.

தற்பொழுது மரண பார்மில் இருக்கும் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் 2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் முன்னிலையில் உள்ளனர்.

இதனால் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எடுத்தே தீரவேண்டும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இரண்டு பேருக்கும் திரும்ப இடம் கொடுத்தே ஆகனும்; ஹர்பஜன் சிங் சொல்கிறார் !! 3

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர் கூட்டணியையும் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதில்,“ஏன் இந்திய அணித் தேர்வாளர்கள் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தவர் குல்தீப் மற்றும் சஹால்(kul-cha) ஆகிய இருவரயும் கைவிட்டர்கள் என்று தெரியவில்லை, மீண்டும் இவர்களை இந்திய அணியில் இணைக்க வேண்டும், நிச்சயம் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்துவார்கள், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து விளையாடிய போட்டிகள் அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர். அது டி20 தொடராக இருந்தாலும் சரி ஒருநாள் தொடர் இருந்தாலும் சரி அவர்கள் வெற்றிகர கூட்டணியாகவே வலம் வந்துள்ளனர் என்று ஹர்பஜன் சிங் பாராட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *