நான் விளையாடிய காலத்தில் இந்திய அணி எனக்கு ஒருபோதும் உறுதுணையாக இருந்தது கிடையாது இந்திய அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் என்று தோனியை ஒருபுறம் பலரும் பாராட்டினாலும் ஒரு சிலர் தோனியை இன்னும் விமர்சனம் செய்து கொண்டு தான் வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான மகேந்திர சிங் தோனியை ஹர்பஜன் சிங்,கௌதம் காம்பீர் போன்ற வீரர்கள் விமர்சித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தோனியின் உற்ற நண்பராக கருதப்பட்ட யுவராஜ் சிங்கும் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
ஹோம் ஆப் ஹீரோஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய யுவராஜ் சிங், தோனி எப்படி 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார் என்பது பற்றி பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர்,“38 வயதான பொழுதும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 350 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார், அதிலும் ஒரு படி மேலாக 2019 நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் தோனி பங்கேற்று விளையாடினர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் தோனிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தான், இந்த விஷயத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த ஆதரவு அனைவருக்கும் கிடைப்பது இல்லை,குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த விவிஎஸ் லக்ஷ்மன், கவுதம் கம்பீர், விரேந்தர் சேவாக், மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு கிடைக்கவில்லை, ஒரு வீரர் பேட்டிங் செய்யும் போது அவருக்கு எந்த ஒரு நெருக்கடியிலும் இருக்கக்கூடாது, எப்பொழுதும் பேட்டிங் செய்யும் பொழுதெல்லாம் இதுதான் நம்முடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று ஒரு வீரர் நினைக்க கூடாது,ஆனால் சிலருக்கு தன் தலைக்குமேல் கத்தி தொங்க விட்டது போல் உள்ளது இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான், ஆனால் நான் இதைமட்டும் நான் காரணமாக கூறவில்லை என்று யுவராஜ் சிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.