ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் ரியான் பராக்கிர்க்கு ராஜஸ்தான் அணி ஏன் இவ்வளவு ஆதரவு அளிக்கிறது என்று தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் பங்கேற்று மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு (18/04/21) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தன்னுடைய ஆறாவது போட்டியை எதிர்கொள்ளவிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படியாவது கொல்கத்தா அணியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இதன்காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்..என்ன செய்யக்கூடாது.. என்பது குறித்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போன இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரியன் பராக் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “கடந்த 2 ஐபிஎல் தொடரில் ரியான் பராக்கின் மொத்த அவரேஜ் 11தான்,மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 110,அப்படியிருந்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 3.38 கோடி கொடுத்து அணியில் எடுத்துள்ளது, கடந்த மூன்று வருடங்களில் நம்மால் காண முடியாததை ஏதோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரிடம் கண்டிருக்கிறது,அதனால்தான் அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்து கொண்டே உள்ளது, அதே போன்று நானும் அவர் என்னதான் செய்வார் என்று நம்பிக்கையாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளேன்” என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார்.