ஐபிஎல் மினி ஏலம் 2023; விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் குறித்து காண்போம்.
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால், ஒவ்வொரு அணியும் தனக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பட்டியலை தயார் செய்து வருகிறது.
இதனால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் எந்த அணிக்கு எந்த வீரர் தேவைப்படுவார்.? எந்த அணி நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுக்கும் என்பது போன்ற பல்வேறு சுவாரசியமான விஷயங்களை தெரியப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வெளிநாட்டு வீரர்கள் குறித்து காண்போம்.
டாம் லாதம்
கடந்த பத்து வருடங்களாக நியூசிலாந்து அணியின் நம்பிக்கை கூறிய வீரராக வலம் வரும் டாம் லாதம், 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர், டி20 போட்டிகளில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலை போவது கடினமாக ஒன்றாகவே இருக்கும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால்,ஹென்றிச் கிளாசன், நிக்கோலஸ் பூரான், பில் சால்ட் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளதால், இவருக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.