ஆங்கிலோ மேத்யூஸ்.
இலங்கை அணியின் சீனியர் வீரரான ஆங்கிலோ மேத்யூஸ் 2009 முதல் 2017 வரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி அணி, புனே வாரியர்ஸ் போன்ற அணிகளில் இடம்பெற்று விளையாடியுள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலமுறை தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த இவர், கடந்த 2021 மார்ச் மாதம் நடைபெற்ற டி20 தொடரில் கடைசியாக விளையாடியுள்ளார். மேலும் இவர் தன்னுடைய ஆரம்ப தொகையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்துள்ளதால் இவரை ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் தேர்ந்தெடுக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.