ஹென்றிச் கிளாசன்
31 வயதான தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன், டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமை படைத்தவர்.
இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் லீக் தொடரான SA-20 தொடரில், டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதுவரை 131 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய கிளாசன் 2489 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 136.45, இதனால் இவரை லக்னோ அணி 2023 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.